வவுனியாவில் சில நாட்களுக்கு முன்னர் உயர்தரம் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் ஆண் ஆசிரியரினால் பாடசலையில் வைத்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும்இ குறித்த மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையிலும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு வாரங்களுக்கு முன்னர் மாணவி தாக்கப்பட்ட நிலையில் ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் அந்த இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு ஆசிரியர் அழுத்தம் வழங்கியதாவும், வேறு வழிகளில் தனக்கு அச்சுறுத்தல் வழங்கியதாகவும் அதன் காரணமாக தான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில் சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.