Thursday, January 16, 2025
25 C
Colombo
வடக்குமருமகனின் தாக்குதலில் மாமனார் பலி

மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி

யாழ்ப்பாணத்தில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்றையதினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வதிரி – கரவெட்டி – நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி குறித்த நபரின் குடும்பத்தவர்கள் கோண்டாவில் உள்ள உறவினர்களின் வீட்டிற்கு கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் அவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

இதன்போது மதுபோதையில் வந்த அவருடைய அக்காவின் மகன் (மருமகன்), அவரை தாக்கியுள்ளார்.

இந்த விடயம் அறிந்த அயலவர்கள் அவரை மீட்டு மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

மேலதிக சிகிச்சைக்காக அவர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அன்றையதினமே மாற்றப்பட்டார்.

இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்தார்.

தாக்குதலை மேற்கொண்டவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மந்திகை பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles