நானுஓயா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நானுஓயா டெஸ்போட் ஏ பிரிவில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10) இடம் பெற்றதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா டெஸ்போட் தோட்டம் ஏ பிரிவை சேர்ந்த 29 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரேதப்பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.