பலாங்கொடை- ஹட்டன் பிரதான வீதியில் பின்னவல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் அந்த வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
நேற்று (07) இரவு பெய்த கடும் மழைக் காரணமாக குறித்த மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.