Friday, October 10, 2025
25 C
Colombo
அரசியல்உழைக்கும் மக்களின் சம்பளம் முதலில் அதிகரிக்கப்பட வேண்டும்!

உழைக்கும் மக்களின் சம்பளம் முதலில் அதிகரிக்கப்பட வேண்டும்!

உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்தேகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த வருடம் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அது அதிபர் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்று கூற முடியாது.

ஆனால் அடுத்த ஆண்டு தேர்தல் நிச்சயம் நடக்கும். அதற்கு பொதுஜன பெரமுன திட்டமிட்டவகையில் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் முதலில் உழைக்கும் மக்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும்,

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் யுத்தத்தின் பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles