Monday, April 7, 2025
25 C
Colombo
கிழக்கு13 வயது சிறுவன் சடலமாக மீட்பு - மதரஸா நிர்வாகி கைது

13 வயது சிறுவன் சடலமாக மீட்பு – மதரஸா நிர்வாகி கைது

13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (5) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மத்ரஸாவில் மஹ்ரீப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு இல்லாததன் காரணமாக சில மாணவர்கள் அவரை தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அம்மாணவன் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சிறுவன் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சிறுவன் தற்கொலை செய்து கொள்ளும் அளவு கோலையல்ல என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்ததுடன், வேறு ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் எனவும் கேட்டுக்கொண்டனர்.

இதனை அடுத்து மத்ரஸா மாணவனின் மரணத்தில் சந்தேகம் என குறித்த மத்ரஸாவினை சுற்றி பொதுமக்கள் குவிந்தமையினால் சாய்ந்தமருது பொலிஸ் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர்.

மேலும் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை, சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.

இது தவிர குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே பல பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles