Friday, January 17, 2025
28.6 C
Colombo
வடக்குமன்னாரில் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை

மன்னாரில் இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை

கடந்த 2009 ஆம் ஆண்டு மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்தார்.

அதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பில் மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், குறித்த நபருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய்க்கு 14 வருடங்களின் பின்னர் மன்னார் மேல் நீதிமன்றம் இன்று (6) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மன்னார் பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில் 2009 அக்டோபர் 2 ஆம் திகதியன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ சேவையில் இருந்த போது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்தார்.

குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்தது.

முருங்கன் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தீர்ப்புக்காக இன்றைய தினம் (6) மன்னார் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்.எம்.மிகால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது இரண்டு மனிதப் படுகொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்ட நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதியால் குறித்த இராணுவ சிப்பாய்க்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles