நேற்று முன்தினம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வேனுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வேன் ஒன்றில் வந்த கும்பல் ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அப்போது பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிசார் குறித்த குழு மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போதிலும் அவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.
இந் நிலையில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலில் முல்லைத்தீவு பகுதியில் வைத்து குறித்த கும்பலை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.