Friday, January 16, 2026
26.1 C
Colombo
மலையகம்நானுஓயாவில் வீதி தாழிறக்கம் - சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

நுவரெலியா – ஹட்டன் ஏ7 பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறிய அளவிலான வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்த நிலையிலே தொடர்ந்து பெய்த கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பாரிய அளவில் வீதி தாழிறக்க அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதி ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதால் சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தைச் செலுத்துமாறு நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்

எனவே குறித்த இடத்தில் விபத்து ஏற்படுவதற்கு முன் உரிய அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் என சாரதிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்ததனர்.

இந்நிலையில், தாழிறங்கியுள்ள குறித்த வீதிப்பகுதி விரைவில் புனரமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles