யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால் கையளிக்கப்பட்டது.
நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரி அவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சிக்கல்களுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கடந்த 1 ஆம் திகதி முதல் நடைபெறும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் எதிர்வரும் 8ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தற்போதைய காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது