வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவ்வருடம் 2 புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச எய்ட்ஸ் தினமான இன்று (01) வவுனியா பொது வைத்தியசாலையில் பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.