திருகோணமலை – சம்பூர் – தொடுவான்குளம் ஏரியில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நேற்று (29) பிற்பகல் ஏரியில் நீராடச் சென்ற போதே இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
தோபூர் – பாடலிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரதேசவாசிகள் முதலையிடமிருந்து இளைஞரை மீட்டதுடன், அதற்குள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.