Friday, April 4, 2025
30 C
Colombo
கிழக்குகடலில் மூழ்கிய 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

கடலில் மூழ்கிய 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கிய 15 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று முன்தினம்(28) மாலை தனது நண்பர்களுடன் கடலில் நீராடச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

செங்கலடி ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் இன்று மாலை 7.00 மணியளவில் கடலில் மிதப்பதை அவதானித்த மீனவர்கள் – கரைக்கு எடுத்து வந்ததுடன், சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles