Thursday, February 5, 2026
25 C
Colombo
வடக்கு13 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

13 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – வடமராட்சி வெற்றிலைக்கேணி வத்திராயன் பகுதியில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா நேற்று (27) கைப்பற்றப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தாளையடியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 03 பிளாஸ்டிக் பரல்களில் அடைக்கப்பட்டிருந்த 17 பார்சல்களில் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 34 கிலோ 400 கிராம் எடை கொண்டது எனவும் மொத்த மதிப்பு 13 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles