மன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று (29) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு வீடொன்றை நேற்று (28) சோதனையிட்டபோது ஒரு கிலோ 30 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நீண்ட காலமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட கஞ்சாவுடன் சந்தேகநபரான பெண்ணும் மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கைக்காக அவர் இன்று (29) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பேசாலை பொலிசார் தெரிவித்தனர்