Monday, April 21, 2025
31 C
Colombo
சினிமாமனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் - ஞானவேல் ராஜா

மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் – ஞானவேல் ராஜா

இயக்குநர் அமீர் உடனான மனக் கசப்பு தொடர்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“’பருத்தி வீரன்’ பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை;

என்றைக்குமே “அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன்;

ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்;

அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது;

அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்;

என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்”

https://twitter.com/StudioGreen2/status/1729726873389662333/photo/1

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles