320,000 மில்லி லீற்றர் கோடாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் பழைய ஸ்டோர் டீ பிரிவின் காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த 320,000 மில்லி லீற்றர் கோடாவும், 4 பீப்பாய்களும் பதுளை போதை ஒழிப்பு பிரிவினரால் நேற்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளத.
இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாவும் லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பிராந்திய போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டோர் 53 மற்றும் 42 வயதுடைய ஹொப்டன் பழைய ஸ்டோர் டீ பிரிவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் இரு சந்தேக நபர்களும் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் அவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.