Saturday, May 3, 2025
30 C
Colombo
அரசியல்ஜனாதிபதி என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகிறார் – ரொஷான்

ஜனாதிபதி என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகிறார் – ரொஷான்

தனக்கு வாழ்வதற்கான உரிமை வேண்டும் எனவும், வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி ஓட வேண்டிய தேவை தனக்கு இல்லையெனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று (27) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமான வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஊழல், மோசடிகளை வெளிக்கொணர்ந்த எனக்கு அப்படிச் செய்யலாமா? எனவும் இதன்போது கேள்வி எமுப்பினார்.

எனது அரசியல் வரலாற்றில் நான் யாரிடமும் கை நீட்டியது கிடையாது. எந்த தீய செயல்களுக்கும் துணை நின்றதும் கிடையாது.

களவெடுப்பவர்களை காட்டிக்கொடுத்தமையால் நடுவீதியில் வைத்து இன்று அல்லது நாளையோ என்னை படுகொலைச் செய்யமுடியும்.

என்னை படுகொலைச் செய்தால்இ அதற்கான பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும்இ சாகல ரத்னாயக்கவும் பொறுப்பேற்கவேண்டும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles