சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் பகுதியில் 30 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று முன்தினம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதேவேளை, நேற்று 100 போதை மாத்திரைகளுடன் ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் சந்தேகபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.