வவுனியாவில் லொறியுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தானது வவுனியா நகர பள்ளிவாசலின் முன்பாக இடம்பெற்றிருந்தது.
வவுனியா ஏ9 வீதியில் இருந்து கோவில்குளம் நோக்கி சென்ற லொறியுடன், துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.