சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த இளைஞனுடன் கைதான மற்றைய நபர் அடையாளம் காட்டும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார்.