Monday, January 19, 2026
30.6 C
Colombo
வடக்குயாழில் வேன் தீக்கிரை - உரிமையாளர் காயம்

யாழில் வேன் தீக்கிரை – உரிமையாளர் காயம்

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் சிறிய ரக வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

வானில் பற்றிய தீயினை அணைக்க முயன்ற வேனின் உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வேன் பாடசாலை சேவையில் ஈடுபட்டு வந்தது எனவும், நேற்றைய தினம் பாடசலை சேவையில் ஈடுபட்ட பின்னர் வாகனத்தை வீட்டில் நிறுத்தி வைத்திருந்த போது,வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

அதனை அவதானித்த உரிமையாளர் தீயினை அணைக்க போராடிய போதிலும், வாகனம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.

அதன் போது, தீயினை அணைக்க முற்பட்ட உரிமையாளரும் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles