மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மலைநாட்டு ரயில் தண்டவாளத்தில் மண்மேடு, பாறைகள் சரிந்து விழுந்ததனால் குறித்த ரயில் சேவை நேற்று (23) நானுஓயா வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்படி, பதுளை ரயில் நிலையத்தில் ஆரம்பமாகும் சகல ரயில்களும் நானுஓயா ரயில் நிலையத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறெனினும் ரயில் தண்டவாளத்தில் சரிந்து வீழந்த மண்மேடு, பாறைகளை அகற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனால் மலையக மார்க்கமூரடான ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.