Monday, March 16, 2026
31.7 C
Colombo
வடக்குமுல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் நேற்று இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (22) மாலை 5 மணியளவில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்குளாய் கிழக்கு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிஸார், சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரிலே 32 வயதுடைய நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் இன்று அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles