Saturday, January 18, 2025
30 C
Colombo
வடக்குமல்லாவியில் விபத்து ஒருவர் பலி - மற்றுமொருவர் காயம்

மல்லாவியில் விபத்து ஒருவர் பலி – மற்றுமொருவர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்

இன்று (23) காலை 6.10 மணியளவில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்து எந்த சமிக்ஞைகளுமின்றி திடீரென திரும்பியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்,மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் தூக்கி வீசப்பட்டதாகவும், மற்றயவர் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

சம்பவத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடை நபராவார்.

சம்பவ இடத்துக்கு சென்று மல்லாவி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles