பல கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நிறைவு பெற்றுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளை தனியாருக்கு கையளிப்பது உள்ளிட்ட 3 பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு, அதன் ஊழியர்கள் நேற்று (22) காலை முதல் இரவு 07.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்களால் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதுடன், சில ஊழியர்கள் டிக்கெட் இயந்திரங்களையும் எடுத்துச் சென்றதாக போக்குவரத்து அமைச்சர் குற்றம் சாட்டினார்.
எனினும் முப்படையினரால் அன் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டமையினால் பயணச்சீட்டு வழங்குவதில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டனர்.