பசறை, கோணக்கலை காவத்த தோட்டத்தில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்த நபரை விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பசறை கோணக்கலை காவத்தை தோட்டத்திலதை சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 17ம் திகதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் பணிபுரியும் சந்தேக நபர், குறித்த சிறுவன் வீடு திரும்பும் போ, அவரை தனது வாகனம் பழுது பார்க்கு இடத்துக்கு அழைத்து சென்று பலவந்தமாக மது அருந்த கொடுத்து கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.