முல்லைத்தீவு முறுகண்டி ரயில் நிலையத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சுமார் 500 மீற்றர் தொலைவில் உத்தரதேவி ரயிலில் மோதுண்டு யானை பலியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த குறித்த ரயிலில் யானை மோதுண்டுள்ளது.
யானைகள் கடக்கும் இடம் என்ற எச்சரிக்கை அறிவித்தலும் காணப்படுகின்ற பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.