Sunday, June 28, 2026
30.6 C
Colombo
மலையகம்மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக ரயில் சேவை பாதிப்பு

ஒஹியவிற்கும் இந்தல்கஸ்ஹின்னவிற்கும் இடையில் ரயில் தண்டவாளத்திற்கு மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் மலையக பகுதிக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு தபால் ரயில் ஒஹிய ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயில் ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலையக பகுதிக்கான ரயில் பாதையை சீரமைக்க சுமார் 3 மணித்தியாலங்கள் தேவைப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles