Friday, January 17, 2025
24.1 C
Colombo
மலையகம்விஷம் அருந்தி பாடசாலைக்கு சென்ற மாணவன்

விஷம் அருந்தி பாடசாலைக்கு சென்ற மாணவன்

விஷம் அருந்திவிட்டு பாடசாலைக்கு சென்ற மாணவர் ஒருவர் இன்று (21) காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படும் பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த மாணவன் இன்று (21) காலை வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை ஆசிரியர்கள் பலர் தன்னையும், தாயாரையும் தொடர்ந்து திட்டியதால் பொறுக்க முடியாமல் இந்த மாணவன் இன்று காலை விஷம் அருந்தி பாடசாலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த மாணவனிடம் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் கூறியதை அடுத்து அவர் விஷம் அருந்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.

உடனே ஆசிரியர்கள் குறித்த மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles