Saturday, September 21, 2024
28 C
Colombo
வடக்குவட்டுவாகல் பாலத்தின் அவல நிலை

வட்டுவாகல் பாலத்தின் அவல நிலை

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது.

இவ்வாறு சேதமடைந்து காணப்படும் பாலமானது அடிக்கடி உடைவுகள் ஏற்படும்போது தற்காலிக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றதே தவிர நிரந்தர புனரமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை.

பாலத்தின் மையப்பகுதியில் பாரியளவில் உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.

தற்போது ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தில் பல்வேறு இடங்களில் வெடிப்புக்களும் வீதி பாதுகாப்பு அற்றதாகவும் வீதியில் சில இடங்களில் தாழிறங்கியும் காணப்படுகிறது.

பலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்து கூறியும் புனரமைப்பு பணிகள் எவையும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து பாலத்தை மேவி செல்வதோடு, கனரக வாகனங்களும் இதன் ஊடாக செல்லும் போது மேலும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பல விபத்துகள் குறித்த பகுதியில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மழைகாலங்களிலும் குறித்த பாலம் இவ்வாறான நிலைமைக்கு செல்வதோடு ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலையும் காணப்படுவதாகவும், குறித்த பாலத்தினை சீரமைத்து தரும்படியும் அப்பாலத்தினூடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles