Thursday, January 15, 2026
25 C
Colombo
அரசியல்குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் மஹிந்த

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் மஹிந்த

பொருளாதாரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இன்று (21) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாம் தனிப்பட்ட இலக்குகளிலிருந்து பார்க்க வேண்டும். இல்லையெனில், சிறந்த வரவு செலவுத் திட்டங்கள் கைவிடப்படும்.

எது சரியோ அதைச் சரியென்றும், தவறைத் தவறென்றும் காட்ட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை நம்பிக்கையுடன் முன்னோக்கி கொண்டு செல்லுங்கள். நாங்கள் எப்போதும் மக்கள் கருத்தில்தான் இருக்கிறோம். மக்கள் பிரச்சனையில் சிக்காத வகையில் மக்களுக்காகச் செயல்படும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு நாங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம்.

நாட்டின் பொருளாதாரம் மக்களுடன் உயர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அதற்கான பின்னணியை அமைக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் ஆதரவளிப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles