Friday, September 20, 2024
29 C
Colombo
வடக்குகிளிநொச்சியில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்றும் பணி ஆரம்பம்

கிளிநொச்சியில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்றும் பணி ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான நிலையில் இருந்த 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது.

குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்டது. அதில் 46 மரங்கள் முழுமையாக அகற்றவும்இ 11 மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றவும் அனுமதி கோரப்பட்டது.

அனுமதி கிடைக்கப்பெற்றதை அடுத்து இன்று குறித்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடவடிக்கைக்கு போக்குவரத்து பொலிசார், மின்சார சபை ஊழியர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபையினர் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

குறித்த மரங்களில் அதிகமான பாலை மரங்கள் உள்ளதுடன், அவை யுத்த காலத்தில் சன்னங்களால் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

இதேவேளை, கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்பாகவும், அவ்வீதியிலும் காணப்படும் ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகளை அகற்ற்றும் பணிகளும் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என அரசாங்க மரக் கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles