Sunday, May 12, 2024
29 C
Colombo
வடக்குகொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று ஆரம்பம்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று ஆரம்பம்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (20) ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.

அகழ்வுப்பணி தொடர்பாக நேற்று தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அகழ்வு பணி இன்று 20 ஆம் திகதி காலை 8 மணியளவில் ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற இருப்பதாகவும் புதை குழிக்குள் நீர் தேங்காதவாறு போடப்பட்டுள்ள கொட்டகையானது மேலும் 10 அடிக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இம்முறை அகழ்வுபணி நடைபெறும் போது ராடர் என்ற கருவியை பாதுகாப்பு அனுமதியை பெற்று பரீட்சித்து பார்க்க எதிர் பார்த்துள்ளதாகவும், இதன் மூலம் எவ்வளவு தூரத்திற்கு குறித்த புதைகுழியானது உள்ளது என அடையாளப்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும்.

நீதிமன்ற கூற்றுப்படி 2.5 மில்லியன் ரூபா வரையிலான நிதி இருப்பதாகவும், அந்த நிதி இரண்டு வாரங்களுக்கு அகழ்வுபணி மற்றும் ஏனைய பணிகளை மேற்கொள்ள போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் குறித்த தீர்மானம்

சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதங்கள் தொடர்பில் தெளிவான பகுப்பாய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சிரேஷ்ட...

Keep exploring...

Related Articles