Monday, November 18, 2024
25.7 C
Colombo
வடக்குயாழில் நூற்றாண்டு கால பழமையான மரம் சரிந்தது

யாழில் நூற்றாண்டு கால பழமையான மரம் சரிந்தது

யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முறிந்து விழுந்தது.

யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது.

பாடசாலை முன்னால் இருந்த நிலையில் மரம் வீதிக்கு குறுக்காக விழாது வெற்றுக் காணிக்குள் விழுந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் வீதியோரமாக உள்ள மரங்கள் முறிந்து விழுகின்ற நிலையில் இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles