நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து விடுபட அரசியல் தீர்வுகளால் பலனில்லை எனவும், பொருளாதார தீர்வே தேவை எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை கிடைத்த பின்னர் தடைப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் மீள ஆரம்பிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.