தீபாவளி பண்டிகை காலத்தில் ஹட்டன் இபோச டிப்போ, பேருந்து சேவைகள் மூலம் 245 இலட்சம் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
ஹட்டன் இபோச டிப்போவின் உதவி முகாமையாளர் எம்.மஹாநாம இதனைக் குறிப்பிட்டார்.
இம்மாதம் 08ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியில் ஹட்டன்-கொழும்பு, ஹட்டன் -கண்டி பிரதான வீதிகள் மற்றும் பெருந்தோட்டம் தொடர்பான ஏனைய வீதிகளில் பேருந்துகளை இயக்கியதன் மூலம் இந்த வருமானத்தைப் பெற முடிந்ததாக ஹட்டன் இபோச டிப்போ தெரிவித்துள்ளது.