Wednesday, September 10, 2025
30 C
Colombo
வடக்குயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு

யாழ்ப்பாணத்தில் இரு குடும்பத்தினர் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடு காரணமாக வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதில் வீட்டின் முன் கதவு சேதமடைந்துள்ளதுடன் இ வீட்டின் வாசலில் இருந்த காலணிகள் தீயில் எரிந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், தம்முடன் முரண்பட்டுள்ள குடும்பமே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தாக்குதலுக்கு இலக்கான வீட்டார் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles