Thursday, September 11, 2025
29 C
Colombo
வடக்குயாழில் தனது தாடியாலும் தலை முடியாலும் வாகனத்தை இழுத்து சாதனை படைத்த நபர்

யாழில் தனது தாடியாலும் தலை முடியாலும் வாகனத்தை இழுத்து சாதனை படைத்த நபர்

உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று (12) பிற்பகல் 4மணிக்கு மட்டுவிலில் சாகச நிகழ்வொன்றை நிகழ்த்தியுள்ளார்.

தென்மராட்சி மட்டுவில் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான அவர், மட்டுவில் கண்ணகை சிறுவர் கழக முன்றலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம், இரண்டாயிரம் கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது தலை முடியால் இழுத்தும், தாடியால் இழுத்தும் சாகசம் நிகழ்த்தியிருக்கிறார்.

இவர் அண்மையில் தனது தாடியினால் 400 மீற்றர் தூரம் 1500 கிலோ எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles