Saturday, July 5, 2025
31.1 C
Colombo
வடக்குமகன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி - அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு

மகன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி – அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு

மகன் விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவத்தில், சோனெழு – கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த 70 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் இரண்டாவது மகன் நேற்றையதினம் விஷம் அருந்தியதனால் அதிர்ச்சியில் தந்தையார் மயங்கியுள்ளார்.

இந்நிலையில் அவரை உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

விஷம் அருந்திய மகன் உயிர் தப்பிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles