Wednesday, September 10, 2025
30 C
Colombo
மலையகம்நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக போராட்டம்

நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக போராட்டம்

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதான நகரில் இன்று (09) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியாவில் பிரதான நகரில் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிறுவனத்துக்கு ஒப்படைக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு பலரும் எதிர்ப்பு காட்டுவதுடன் பிரதானமாக நுவரெலியா மக்கள் பல்வேறு வழிகளில் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இப்போராட்டத்தில் தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஏராளமான தபால் நிலைய ஊழியர்கள் பெருமளவிலானவர்கள் போராட்டத்துடன் இணைந்ததுடன் போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடி காட்டிய வண்ணம் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles