Saturday, January 31, 2026
25.6 C
Colombo
வடக்குஇரு வாகனங்கள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

இரு வாகனங்கள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் செல்லும் வீதியில் உரும்பிராய் சந்திரோதயா (ஞானபண்டிதர்) பாடசாலைக்கு அருகாமையில் நேற்று மாலை 2 மணியளவில் டிப்பர் மற்றும் ஹண்டர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவத்தில் இரு வாகனங்களின் சாரதிகளும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த சாரதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து அதிவேகம் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles