Friday, April 4, 2025
24 C
Colombo
கிழக்குபல கடைகள் தீக்கிரை

பல கடைகள் தீக்கிரை

மட்டக்களப்பு-கல்முனை வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம், பழைய பொருட்கள் விற்பனை நிலையம், பழக்கடை போன்றன தீக்கிரையாகியுள்ளன.

பல கடைகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றிரவு இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பொலிசார், மட்டக்களப்பு மாநகர தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் தீயினால் ஏராளமான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும், தீயினால் ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles