சட்டவிரோதமான முறையில் அனுமதிக்கப்படாத பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 4 டிப்பர்களுடன் அதன் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கடந்த 24 மணி நேரத்தில் கல்லாறு, புளியப்பொக்கணை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 4 டிப்பர் வாகனங்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.