சமய சமூகப் பணிகளில் ஏனைய ஆலயங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வரும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்திற்குரிய இணையத்தள சேவையானது ஆலய தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனா் இன்று (7) காலை ஆரம்பித்து வைத்தார்.
இந்த இணையத்தளச் சேவையின் மூலம் உலகெங்கிலுமுள்ளவர்கள் ஆலயத்தில் இடம்பெறும் பூசைகள், நிகழ்வுகள் மற்றும் சமூக நலத் திட்டம் தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள முடிவதுடன் சமூக நலத் திட்டங்கள் தேவைப்படுவோருக்கு உரிய முறையில் திட்டங்கள் சென்றடையவும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது.