குருணாகலிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகாமையில் லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த லொறியின் சாரதி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையின் போது விற்பனைக்காக குருணாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நகருக்கு ஆடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.