Friday, March 14, 2025
26.2 C
Colombo
வடக்குபிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் சிறைக்கு

பிணையில் விடுவிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் சிறைக்கு

கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களை ஆள்பிணையில் எடுப்பதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் அவர்களை நேற்று (5) இரவு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டவிரோத ஆர்ப்பாட்ட பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களையும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத் ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் நேற்றைய தினம் விடுவிக்க உத்தரவிட்டார்

அவர்களை சரீர பிணையில் எடுப்பதற்கு தேசிய அடையாள அட்டையை கிராமசேவகர் உறுதிப்படுத்திய ஆவணங்களை நீதிமன்றில் நேற்றைய தினம் ஒப்படைக்க பிந்திய நிலையில் அவர்களை சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளித்ததையடுத்து மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை ஆள்பிணையில் எடுப்பவர்கள் ஆவணங்களுடன் சிறைச்சாலைக்கு சென்று வழங்கிய பின்னர் விடுவிக்கப்படுவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles