Friday, March 14, 2025
26.2 C
Colombo
அரசியல்டயனா தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை குழு இன்று கூடுகிறது

டயனா தாக்கப்பட்ட சம்பவம்: விசாரணை குழு இன்று கூடுகிறது

அண்மையில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (06) அழைக்கப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் நளுமhடான்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது குழுவின் அருகில் இருந்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவும் குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.

சமல் ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக, இம்தியாஸ் பகீர் மார்க்கர் மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles