Wednesday, September 10, 2025
28.9 C
Colombo
வடக்குகிளிநொச்சியில் அதிகரித்து வரும் கால்நடை திருட்டு

கிளிநொச்சியில் அதிகரித்து வரும் கால்நடை திருட்டு

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் திருடப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்பட்டு வருகின்ற கால்நடைகள் திருடப்பட்டு பராமரிப்பு இன்றி காணப்படுகின்ற காணிகளுக்குள் வெட்டப்படுவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் வீடு புகுந்து கத்தி முனையில் அச்சுறுத்தி கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், இரவுவேளைகளில் மட்டுமின்றி பகல் வேளைகளிலும் வீடுகளில் தனியாக இருப்பது அச்சத்தை தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும்
எந்த பயனும் இல்லை என்றும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles