Thursday, January 16, 2025
26 C
Colombo
மலையகம்தீபாவளி முற்பணமாக 20,000 ரூபாவை கோரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள்

தீபாவளி முற்பணமாக 20,000 ரூபாவை கோரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள்

தீபாவளி முற்பணமாக 20,000 ரூபாவை வழங்கக் கோரி அக்கரப்பத்தனை டயகம கிழக்கு தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கரபத்தனை டயகம ஈஸ்ட் தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக நேற்று முற்பகல் கூடிய தொழிலாளர்கள், தீபாவளி முற்பணமாக 20,000 ரூபா வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

வருகை வீதத்திற்கு அமைய, தீபாவளி முற்பணத்தை வழங்கும் நடைமுறை காரணமாக ஒரு சிலருக்கு மாத்திரம் 20,000 ரூபா முற்பணம் கிடைத்துள்ளதாகவும் இதனால் ஏனையவர்கள் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடுவதாகவும் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

டயகம கிழக்கு தோட்டத்தின் மூன்று பிரிவுகளையும் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles